×

டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து தவறாக கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டோரை கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து தவறாக கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தினவிழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.

அதில் சசிதரூர், ராஜ்தீப், சர்தேசாய் ஆகிய முக்கியஸ்தர்கள் காவல்துறை சார்பில் FIR பதிவு செய்யப்பட்டது. நொய்டா காவல்துறை சார்பாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக அன்றைய தினம் ஒரு விவசாயி உயிரிழந்திருந்தார். அவர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்தார் என சசிதரூர் தெரிவித்திருந்தார். விவசாய அமைப்புகள் தெரிவித்ததாக ராஜ்தீப் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எனவே அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இவர்கள் சார்பாக உடனடியாக இந்த FIR களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; இவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிய இந்த தகவல்கள் அன்றைய தினம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நிறைய சேதாரங்களை ஏற்படுத்தியது. எனவே இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்க கூடாது என்று கூறினார்.

இருப்பினும் அவர்கள் வாதத்தினை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது இடைக்காலமாக இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை மீண்டும் 2 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court ,arrest , Supreme Court orders arrest of accused of misrepresenting tractor rally violence
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...