குலாப் நபி ஆசாத் சிறந்த மனிதர்..அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை.. கண்ணீர் சிந்திய நிலையில் பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெரும் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத்துக்காக பிரதமர் மோடி கண்கலங்கினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆசாத். இந்த நிலையில் மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் பிரியாவிடை தந்து பிரதமர் மோடி பேசினார்.

அப்போது குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர் என்றும் அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை என்றும் புகழாரம் சூட்டினார்.மேலும் அரசியல் ரீதியாக முக்கிய ஆலோசனைகளை பலமுறை குலாம்நபி ஆசாத் தனக்கு கூறியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி,  நாட்டின் மீது அக்கறை கொண்டவர் குலாம் நபி ஆசாத் என்றும் மாநிலங்களவையில் ஆசாத்தின் சேவை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் ஆசாத் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். நாட்டுக்காக அவர் செய்த சேவைகள் மறக்க கூடியவை அல்ல என்றார். இதனிடையே குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசிய போது, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இதனை பார்த்த அவை உறுப்பினர்கள் அனைவரும் சற்று நேரம் அமைதி காத்தனர்.

Related Stories:

More