×

அதிமுக பிரமுகருக்கு சரமாரி கத்தி வெட்டு: வாலிபர் கைது

ஆவடி: அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அரசு பள்ளி அருகே வசிப்பவர் மூர்த்தி(48). வில்லிவாக்கம் ஒன்றிய அதிமுக துணை செயலாளர். மேலும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், மூர்த்தி நேற்று மாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 4 வாலிபர்கள் வந்து அவரிடம் திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என கூறினர். பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்களில் ஒருவர் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மூர்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதை பார்த்த மூர்த்தி, அந்த கும்பலிடமிருந்து தப்பி தெருவில் ஓட்டம் பிடித்துள்ளார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் 4 பேரில் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒரு வாலிபர் மட்டும் மூர்த்தியிடம் சிக்கிக்கொண்டார். அவர் மீண்டும் மூர்த்தியை வெட்டியுள்ளார். அப்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள கத்தியை பிடுங்கி அந்த வாலிபரை வெட்டியுள்ளார். இதில் மூர்த்தியும் அந்த வாலிபரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் மூர்த்தியை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களின் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். விசாரணையில், மூர்த்தியை வெட்டிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன்(25) என்பது தெரியவந்தது. அவரை கைது தலைமறைவான கூட்டாளிகளை தேடுகின்றனர்.


Tags : Volleyball knife ,AIADMK , AIADMK leader, volleyball cut, youth, arrested
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...