×

ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸ்: ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: ஹெச்.சி.எல். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால் தொடங்கப்பட்ட ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல், சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கு காரணமான தங்களது நிறுவன பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் போனஸ் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஹெச்.சி.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில்; எங்கள் ஊழியர்களே நிறுவனத்திற்கு மிக்கபெரிய சொத்து.

சவாலான கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஆர்வமுடனும் ஊழியர்கள் பணியாற்றினார். அதன் பலனாகவே 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியுள்ளோம். இந்நேரத்தில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளது.


Tags : HCL Company Notice , One-time special bonus worth Rs 700 crore for employees: HCL Company Notice
× RELATED தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா?...