×

தண்டுமேடு கிராமத்தில் புதர் மண்டிக்கிடக்கும் பள்ளி மைதானம்: சீரமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: தண்டுமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மைதானம் புதர் மண்டிக்கிடப்பதால் அதனை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தண்டுமேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், கடந்த வரும் மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால், இன்று வரை தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படாததால், அந்த மாணவர்கள் விளையாட முடியவில்லை. இதனால், தண்டுமேடு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மைதானத்தில் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மேலும், மாணவர்கள் விளையாடக்கூடிய சறுக்கு மரம், விளையாடும் உபகரணம் மற்றும் விளையாட்டு பொருட்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தண்டுமேடு பள்ளி மைதானத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Shrubbery School Grounds , Shrubbery School Grounds in Tandumedu Village: Insistence on Alignment
× RELATED தண்டுமேடு கிராமத்தில் புதர்...