×

கேரளாவில் 11.60% மக்கள் கொரோனாவால் பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 11.60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவே தேசிய அளவில் 21 சதவீதமாக உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறினார். ஆன்டிபாடி சோதனை குறித்து ஐசிஎம்ஆர் கடந்த மே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்திய பூஜிய ஆய்வில் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது. திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 1,244 ஆன்டிபாடி சோதனைகள் நடத்தப்பட்டன.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில், கேரளாவில் 0.33 சதவீதம் பொதுமக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது. அப்போது நாடு முழுவதும் 0.73 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதுபோல ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட 2ம் கட்ட ஆய்வில், கேரளாவில் 0.8 சதவீதம் பொதுமக்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டதுது. அப்போது இந்தியாவில் இது 6.6 சதவீதமாக ஆக இருந்தது. ஆன்டிஜென், ஆர்டி-பிசிஆர், சிபினாட், ட்ரூனாட், பிஓசிடி மற்றும் எல்ஏஎம்பி என மொத்தம் ஒரு கோடியே 30 ஆயிரத்து 809 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஏற்கனவே 8 லட்சத்து 90 ஆயிரத்து 720 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 67 ஆயிரத்து 543 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கொரோனா பாசிட்டிவ் விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும் தொற்று உறுதிப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படவில்லை. நேற்று, 82 ஆயிரத்து 804 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 5,942 பெருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை பாசிட்டிவ் விகிதம் 7.18 சதவீதம். இவர்களில் 30 சுகாதார ஊழியர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் உட்பட மாநிலத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் 99 பேரும் அடங்குவர். சிகிச்சையில் இருந்த 6,178 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

மேலும் நேற்று 16 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 3,848 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் கொரோனா பாதிப்பின் நிலை குறித்து மதிப்பிட வந்த மத்திய குழுவை, அமைச்சர் ஷைலஜா கொல்லத்தில்  சந்தித்து பேசினார். அப்போது மத்திய குழுவின் மதிப்பீடுகளுடன் தான் உடன்படுவதாகவும், மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கொரோனா தொற்று கண்டறியப்படுவதன் அடிப்படையில் கேரளா உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. இதுவரை 11.60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது, பரிசோதனை பாசிட்டிவ் 40 சதவீதம் வரை இருந்தது. ஆனால் நாம் 10 சதவீதத்தை எட்டியபோது, ​​நிலைமை மோசமடைந்தாக எண்ணுகிறோம். ஆனால் இறப்பு எண்ணிக்கை 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. கேரளா இதுவரை கொரோனா பரவலை சிறப்பான முறையில் கையாண்டு வருகிறது. அதிக தளர்வுகளை வழங்கும்போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஷைலஜா கூறினார்.

Tags : Shylaja ,Kerala , 11.60% of people in Kerala are affected by corona: Health Minister Shylaja
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...