சசிகலா விவகாரம் பற்றி பேச தயங்கிய அமைச்சர்கள் நீங்க பேசுறது... இல்ல நீங்க பேசுறது...

சசிகலா விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பின்பு வெளியே வந்த அமைச்சர்கள் நீங்க பேசுங்க, நீங்க பேசுங்க என மாறி மாறி தெரிவித்தனர். மேலும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டனர். சசிகலா தமிழகம் வரும்போது கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, சிவிசண்முகம் ஆகியோர் தமிழக காவல் துறை டிஜிபியிடம் நேற்று புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மூவரும் வெளியே வந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்க நின்று கொண்டு இருந்தனர். அப்போது அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமாரின் கையை பிடித்து, ‘பேசுங்க, பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க’ என்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முக்தைப் பார்த்து, ‘நீங்க பேசுங்க சண்முகம் பரவாயில்லை..’ என்றார். இவ்வாறு மாறி, மாறி ‘நீ பேசு... நீ பேசு..’ என சொல்லிக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஊரை அடித்து கொள்ளையடித்த வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இன்றைக்கு சிறையில் இருந்து வந்து நான் தான் அதிமுக என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்’ என்றார். அப்போது, ‘சசிகலா தண்டனை பெற்ற வழக்கில்தான், ஜெயலிலதா தண்டனை பெற்றார், எனவே ஜெயலலிதாவும் தண்டனை பெற்றார் என்று சொல்ல வருகிறீர்களா’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர்கள் யாரும் பதில் அளிக்காமல் கப்சிப் என அமைதி காத்தனர். ஆனால் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ‘செத்தவங்கள பற்றி பேசுறியே, நாளை நீ செத்தா கூட உண்மை பற்றிதான் பேசுவார்கள்’ என்று கூறிவிட்டு சென்றார்.

Related Stories:

>