×

சேலம் சுற்று வட்டாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : விற்பனைக்கு குவிந்தது தர்பூசணி பழங்கள்

சேலம் : சேலத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். மாவட்டத்தின் வழக்கமான மழையளவு 925 மில்லி மீட்டராகும். கடந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சராசரியாக பெய்தது. கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் 2020ம் ஆண்டில் மழையளவு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. கடந்தாண்டு சராசரியாக மழை பெய்திருந்தாலும் ஒரு சில ஏரி, குளங்கள் வறண்டு தான் காணப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக  மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு கோடை தொடங்க இன்னும் ஓரிரு வாரமே இருக்கும்பட்சத்தில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக ஈரோடு, நாமக்கல், சென்னை, வேலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், ஜூஸ் வகைகள் உள்ளிட்டவைகளின் வியாபாரம் அதிகரித்துள்ளது. கோடையில் மழை இல்லாமல் இதே நிலை நீடித்தால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : salem,heat,
× RELATED முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி...