×

விமான கழிவறை தொட்டியில் 1.2 கிலோ தங்கம் சிக்கியது

சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு, உள்நாட்டு விமானமாக மாலை 6.30 மணிக்கு கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் நேற்று அதிகாலை மீண்டும் சென்னைக்கு வந்தது. அதில் பயணம் செய்த அனைவரும் இறங்கி சென்று விட்டனர். பின்னர், அந்த விமானம் டெல்லிக்கு செல்ல வேண்டும். விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் பார்சல் இருப்பது தெரிந்தது. அதை பிரித்து பார்த்தபோது, 1.2 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.62 லட்சம். அதை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த தங்கம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டு சென்னை - ஹவுகாத்திக்கு விமானத்தில் பறந்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து சிக்கியது தெரியவந்தது. இதை கடத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.  சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் கடந்த முயன்ற எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர்கள் 27 கிலோ  இருந்தன. அதை பறிமுதல் செய்தனர். அதன்  மதிப்பு 2.5 கோடி. இதை அனுப்பிய நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


Tags : 1.2 kg of gold was found in the aircraft toilet tank
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது