×

ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: பொருளாதார இழப்புகளை சமாளிக்க சரக்கு, பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்தும்படி ரயில்வே அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: போக்குவரத்து சேவை என்பது மிகுந்த போட்டியுள்ள துறையாக மாறி வருகிறது. அதனை கவனத்தில் கொண்டு ரயில்வே கட்டணங்களையும்  தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாதாந்திர பயணச் சீட்டுகள், குறைந்த கட்டணங்கள், இலவச சேவை போன்ற பல்வேறு சலுகைகளை ரயில்வே துறை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இது போன்ற பல்வேறு சலுகைகளின் காரணமாக ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயும் பயணிகள் சேவைக்காக செலவு செய்யப்படுகிறது. இதன்மூலம், இரு போக்குவரத்து சேவைகளையும் வழங்குவதில் இக்கட்டான நிலை உண்டாகிறது. எனவே, சூழ்நிலையை சமாளிக்க சரக்கு, பயணிகள் சேவைகளில் கட்டண நிர்ணயத்தை விவேகத்துடன் கண்டிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்த கட்டண உயர்வை மிகுந்த திட்டமிடலுடன் அமல்படுத்த வேண்டியதும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Raise train fares: Parliamentary Standing Committee Recommendation
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...