×

அக்சர் பட்டேல் காயத்தால் விலகல்

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேல். 27 வயதான குஜராத் ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் இந்திய அணிக்காக 38 ஒன்டே, 11 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்தொடரில் முதல் 2 போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டிருந்தார். $டேஜா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத நிலையில் அக்சர் பட்டேலுக்குவாய்ப்பு கிடைத்தது. அவர் சென்னையில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பயிற்சியின் போது இடது முழங்கால் காயத்தால் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க வாய்ப்பு இருந்த நிலையில், காயத்தால் அந்த அதிர்ஷ்டம் பறிபோனது. அவருக்கு பதிலாக வலைபயிற்சி பவுலர்களாக  இருந்த ஷாபாஸ் நதீம் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : Akshar Patel , Akshar Patel injured
× RELATED அக்சர் படேலுக்கு கொரோனா