×

அக்சர் படேலுக்கு கொரோனா

மும்பை: ஆல் ரவுண்டர் அக்சர் படேலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய அணி ஆல் ரவுண்டர் அக்சர் படேல், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி அசத்திய பிறகு அவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், மார்ச் 28ம் தேதி மும்பையில் முகாமிட்டுள்ள டெல்லி அணியுடன் இணைந்து தனிமைப்படுத்துதலை தொடர்ந்தார். அன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால், நேற்று வெளியான 2வது பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அதனை டெல்லி அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. கூடவே ‘உரிய மருத்துவ வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்சரை, அணியின் மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது’ என்றும் தெரிவித்துள்ளது. பிசிசிஐ-ன் கொரோனா தடுப்பு விதிகளின்படி நோய் அறிகுறி தெரிந்த நாளில் இருந்து, சம்பந்தப்பட்ட வீரரை 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும். அதனால் டெலலி - சென்னை இடையே ஏப்.10ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மட்டுமின்றி மும்பையில் நடைபெற உள்ள ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் அக்சர் விளையாடும் வாய்ப்பு இல்லை. தனிமைப்படுத்தலின் 9, 10வது நாட்களில் எடுக்கப்படும் சோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால் மட்டுமே அவர் அணியுடன் இணைய முடியும். கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டால் ஏப்.20ம் தேதி சென்னையில் நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் அக்சர் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.



Tags : Akshar Patel , Corona to Akshar Patel
× RELATED டி20 உலக கோப்பை இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக ஷர்துல் தாகூர்