×

ஒரே வீட்டை ஒத்திக்கு காண்பித்து 4 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

மதுரை, மார்ச் 14: மதுரை, ஆனையூர் வளர்நகரை சேர்ந்தவர் புகழ் இந்திரா(41). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இதே பகுதியில் உள்ள ரோஜாமலர் தெருவில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் தற்போது மராமத்து வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த வீட்டை 4 பேருக்கு ஒத்திக்கு விடுவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், மீனாம்பாள்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(62) என்பவரிடம் வீட்டை காண்பித்து, ஒத்திக்கு தருவதாக கூறி அவரிடம் ரூ.7 லட்சம் பெற்றுள்ளார். மறுநாளே, கூடல்நகர் பாலமுருகன்(43) என்பவரிடம் ரூ.8 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை ஒத்திக்கு தருவதாக கூறியுள்ளார்.ஓரிரு நாட்கள் கழித்து சாஸ்தா நகர் அருண்குமார் மனைவி புவனேஸ்வரி(28) என்பவரிடம் வீட்டை காண்பித்து ரூ.7 லட்சம் பெற்றுள்ளார் பின்னர் அரசரடி முத்துச்சாமி மனைவி சரோஜா என்பவரிடம், வீட்டை ஒத்திக்கு தருவதாக கூறி, ரூ8 லட்சம் பெற்றுள்ளார். இதன்படி ஒரே வீட்டை 4 பேரிடம் காண்பித்து, ஒத்திக்கு தருவதாகவும், மராமத்து பணிகள் முடிந்தவுடன் குடிவரலாம் எனக்கூறி, ரூ.30 லட்சத்தை பெற்றுக்கொண்டு யாருக்கும் வீட்டை தராமல் மோசடி செய்துள்ளார்.இந்த சம்பவம் நடைபெற்று 6 மாதங்களாகியும், அவர் வீட்டினை வழங்குவதாக தெரியவில்லை. இதனையடுத்து இவர்கள் 4 பேரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் அவர் பணத்தையும் கொடுக்கவில்லை. இதனையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த 4 பேரும் கூடல்புதூர் போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட போலீசார், ரியல் எஸ்டேட் அதிபர் புகழ் இந்திரா, அவரது தந்தை கணேசபாண்டியன்(56) உள்ளிட்ட 6 ேபர் மீது வழக்குப்பதிந்து புகழ் இந்திராவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது….

The post ஒரே வீட்டை ஒத்திக்கு காண்பித்து 4 பேரிடம் ரூ.30 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Prema Indira ,Anayur Waranagar, Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி