கோபி: கோபி அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சியில் 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலை திட்டத்தை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். நம்பியூர் பேரூராட்சி 11 வது வார்டுக்குட்பட்ட பிலியம்பாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோயில் வீதியில் இருந்து அழகு நாடார் வீதி வரை சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி நிர்வாகம் சாலை வசதி செய்யவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தார் சாலை அமைத்து தர பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் நமக்கு நாமே திட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று தார் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் சிறப்பு வாருந்தினராக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதேபோன்று 9 வது வார்டுக்குட்பட்ட ஓம் சக்தி கோயில் வீதியில் 30 ஆண்டுகளாக மழை நீர் வடிகால் அமைக்கப்படாத நிலையில் அப்பகுதியில் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி நின்றது. அதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதைத்தொடர்ந்து ஓம்சக்தி கோயில் வீதியில் வடிகால் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் தலைமையில் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் மகாலிங்கம், கவுன்சிலர்கள் கலையரசி, கண்மணி, நிர்வாகிகள் சண்முகம், சந்துரு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….
The post 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் நம்பியூர் பேரூராட்சியில் சாலை திட்டம் துவக்கம் appeared first on Dinakaran. | 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் நம்பியூர் பேரூராட்சியில் சாலை திட்டம் துவக்கம் | Dinakaran
×
50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் நம்பியூர் பேரூராட்சியில் சாலை திட்டம் துவக்கம்
02:38 am Mar 12, 2023 |
Tags : Nambiur ,Gobi ,Nambiur Municipality ,Piyampalayam ,Ward ,Mariyamman Koil Road ,Agu Nadar Road ,Municipal Chairman ,Senthilkumar ,Executive Officer ,Natarajan ,Municipal Executive Officer ,Om Shakti Koil Road ,9th Ward ,Omshakti Koil Road ,Mahalingam ,Kalaiyarasi ,Kanmani ,Shanmugam ,Sanduru ,Rajkumar ,Dinakaran ,