×

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு லோக் அதாலத்: 121 வாகன விபத்துகளுக்கு இழப்பீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு லோக் அதாலத் நேற்று நடந்தது.  தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படியும் காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்தலின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை கையாளும் வகையில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் துவக்கி வைத்தார். வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான திருஞானசம்பந்தம் கலந்து கொண்டார். இதில், பேசிய மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை லோக் அதாலத் நிகழ்வு நடைபெறும். அவ்வகையில் கடந்த நிகழ்வின்போது சுமார் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான இழப்பீடுகள் வழங்கப்பட்டது.தற்போது, மோட்டார் வாகன விபத்து தொடர்பாக சிறப்பு லோக் அதலாத் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 வழக்குகள் கையாள திட்டமிடப்பட்டு அதற்கான வழக்காடிகள், வழக்கறிஞர்கள் மற்றும் இன்சூரன்ஸ் துறை நிறுவனங்கள் அழைக்கப்பட்டனர். இதன்மூலம் இரு தரப்பும் சமரச உடன்படிக்கை மேற்கொண்டு வழக்குகளை மகிழ்ச்சியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2020ல் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் சமரசத் தீர்வு எட்டப்பட்டு 2 குடும்ப நபர்களுக்கு சுமார் ₹34 லட்சம் மதிப்பிலான இழப்பீடு தொகையினை மாவட்ட நீதிபதி இளங்கோவன், கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார். இறுதியாக 121 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு இழப்பீடு தொகையாக ₹4 கோடியே 71 லட்சத்து 05 ஆயிரதது 300 வழங்கப்பட்டது….

The post காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு லோக் அதாலத்: 121 வாகன விபத்துகளுக்கு இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Special Lok Adalat ,Kanchipuram District Court Complex ,Kanchipuram ,Lok Adalat ,Kanchipuram District Integrated Court Complex ,National Legal Services Commission… ,Special ,Adalat ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...