×

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து:#AntiNationalBollywood என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்.!!

டெல்லி: டுவிட்டரில் #AntiNationalBollywood என்ற ஹெஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது.
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும்நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் சிஎன்என் இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரையை டேக் செய்து, அத்துடன் ‘இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது டுவிட் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். ரிஹானாவின் டுவிட்டுக்கு பிறகு, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு எதிராக பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி மற்றும் விளையாட்டு வீரர்கள் சுரேஷ் ரைனா, ரவி சாஸ்திரி, வீராங்கனை பிடி, உஷா பலர் உள்ளிட்டவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில், #indiaagsinstpropaganda #IndiaTogether என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த #IndiaRejectsPropaganda என்ற ஹெஷ்டேக் இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்களுக்கு எதிராக  #AntiNationalBollywood என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது இந்தியளவில் #AntiNationalBollywood என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் 5-வது இடத்தில் உள்ளது.


Tags : Comment on Farmers' Struggle: Trending on Twitter with the hashtag #AntiNationalBollywood. !!
× RELATED மலையாள நடிகை பலாத்கார வழக்கு; முக்கிய...