திருத்தணியை தேமுதிக கோட்டையாக மாற்றுவோம் : பிரேமலதா பேச்சு

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற தேமுதிக கட்சி பிரமுகர் திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,  வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இருக்கும் அணிதான் வெற்றிப்பெறும். சட்டமன்ற தேர்தலின்போது கேப்டன் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பார். அதற்காக அவர் ஆயத்தமாகி வருகின்றார். திருத்தணி சட்டமன்ற தொகுதி எப்போதும் தேமுதிகவின் கோட்டையாக உள்ளது. அதை மீண்டும் நமது கோட்டையாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். திருமணத்துக்கு விஜயகாந்த வரவில்லையே தவிர, இங்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். தனது வாழ்த்துக்களை மணமக்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கவேண்டும் என்று விஜயகாந்த் என்னிடம் கேட்டுக்கொண்டார். எனவே, அவரது வாழ்த்துக்களையும் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Related Stories:

>