×

உட்கட்சி பூசலால் பாஜவுக்கு அடிக்கப்போகும் லக்கி பிரைஸ்

2016 சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக வாஷ்அவுட். இதில் கன்னியாகுமரியில் மட்டும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் அதிமுக தோல்வி. எனவே இந்த முறையும் கன்னியாகுமரியை அதிமுக குறி  வைத்துள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய்சுந்தரம் சீட் கேட்டுள்ளார். முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் சீட் நிச்சயம் என்பது கணிப்பு. மீதி உள்ள 5 தொகுதிகளில்  நாகர்கோவிலுக்கு சீட் பெற அதிமுகவில் கடும் போட்டி உள்ளதாம். யாருக்கு சீட் கொடுத்தாலும் உட்கட்சி பிரச்னையால் உள்ளடியால் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் உள்ளூர் அதிமுகவினர். அதிமுகவினரின் மனக்கசப்புகளை தீர்க்க  நாகர்கோவிலை பாஜவுக்கு தாரை வார்க்க அதிமுக தயாராகிவிட்டதாம். ஒரு தொகுதிக்காக ஓராயிரம் அதிமுகவினர் எதிர்ப்பை சம்பாதிப்பதை விட.. தொகுதியை கூட்டணிக்கு கொடுத்துவிட்டால் 5 தொகுதி தப்பும் என்பது அதிமுகவின்  பிளானாம். இதை வலியுறுத்தி தான் உள்ளூர் அதிமுகவினர், கட்சி தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார்களாம். ஏற்கனவே 3 தொகுதி நிச்சயம் பா.ஜ. கேட்கும். நாகர்கோவிலையும் தள்ளி விட்டு விட்டால், கட்சி தலைமை முடிவு என சொல்லி  விட்டு தப்பலாம் என்று திட்டமாம்.



Tags : BJP , Lucky Price to hit BJP over infighting
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...