×

பாதுகாப்பு ,விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது : பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி : பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது எனவும் இத்துறைகளின் ஒத்துழைப்புக்கு ஏரோ இந்தியா அருமையான தளமாக உள்ளது என்றும்  பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை பயிற்சி மைதானத்தில் 13-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார். 


இந்த தொடக்க விழாவில் மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து அணிவகுத்துச் சென்றனர். விமான கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்த சாரங்க் ஹெலிகாப்டர்கள்,  சூரியகிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்வர், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கின்றன.இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 63 விமானங்கள் சாகசங்கள் செய்கின்றன. இதில் 42 விமானங்கள் தினமும் இருமுறை சாகசத்தில் ஈடுபடுகிறது.


இந்த நிலையில் பிரதமர் மோடி விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது. இத்துறைகளின் ஒத்துழைப்புக்கு,  ஏரோ இந்தியா அருமையான தளம். இத்துறைகளில் எதிர்காலத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவாக மாறும் நமது தேடலுக்கு உத்வேகம் அளிக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,Modi , Defense, Aerospace, India, Prime Minister Modi, Proud
× RELATED சொல்லிட்டாங்க…