×

ஜோலார்பேட்டை முதல் பொன்னேரி வரை சாலை விரிவாக்க முதற்கட்ட பணி துவக்கம்-தேசிய நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை முதல் பொன்னேரி வரை சாலை விரிவாக்கம் மற்றும் மரங்கள் வெட்டும் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலை அமைக்கும் பணிக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக ₹300 கோடி ஒதுக்கப்பட்டு சாலை அமைப்பதற்கான பணிகள் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டுசக்கரக்குப்பத்தில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்தது. வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கலெக்டர் சிவன் அருள் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை முதல் பொன்னேரி வரை சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல் மற்றும் சாலையை விரிவு படுத்துவதற்கான ஆய்வு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இப்பணியானது முதலில் சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றி தற்போதுள்ள தார் சாலையிலிருந்து இருபுறமும் 15 மீட்டர் தொலைவிற்கு சாலையை விரிவுபடுத்த சர்வே செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை துறை இன்ஜினியர்கள் மூலம் சாலை அளவீடு செய்யப்படுகிறது.

மேலும், பொன்னேரி முதல் வாணியம்பாடி வரை, ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையோரத்தில் உள்ள மரங்கள் அகற்றப்படும். விரிவாக்க பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் அதிகாரிகள் மூலம் பணிகள் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் முதல் வாணியம்பாடி வரை 3 இடங்களில் சாலை விரிவுபடுத்துதல் மற்றும் மரங்களை வெட்டும் பணி விரிவாக்கம் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : road ,Jolarpet , Jolarpet: Road widening and logging from Jolarpet to Ponneri is in full swing.
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி