×

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் திட்ட வரிவான அறிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திட்ட அறிக்கை பெறப்பட்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த தயானந்த் என்பவர் எழுதிய கடிதத்திற்கு மெட்ரோ நிர்வாகம் பதில் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணிக்கு நிலம் கணக்கிடும் பணி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். சென்னை விமான நிலையம் - வண்டலூர் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையையொட்டி மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து முதல்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை விமான நிலையம் - வண்டலூர் கிளாம்பாக்கம் இடையே 16 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும். இதில், 1.2 கி.மீ தொலைவுக்கு ஒரு ரயில் நிலையம் என்ற கணக்கீட்டின்படி 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே கூறியிருந்தது.

Tags : Chennai Airport - Klambakkam ,Metro Administration , Chennai Airport, Klambakkam, Metro Rail, Project Report
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...