×

அரூர் அருகே கால்வாய் தூய்மை பணியில் காவலர் பயிற்சி மாணவர்கள்

அரூர் : அரூர் கீரைப்பட்டி ஊராட்சிக்குட்ட வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த அணையின் உபரி நீரை பயன்படுத்தி எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, முத்தானூர், மாவேரிப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் நிரப்பட்டுள்ளன. இந்நிலையில், வள்ளிமதுரை வரட்டாறு அணையின், வலதுபுற கால்வாய் கடந்த 4 வருடங்களாக தூய்மை செய்யப்படவிலை.

இதனால், வலதுபுற கால்வாய் மூலம் பயன்பெறும் மொள்ளன் ஏரி, அல்லிக்குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் புகார் கூறினர். போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலதுபுற கால்வாய் பகுதியிலுள்ள முள்புதர்களால் சேதமடைந்து இருந்தது. எனவே, கால்வாய்களை தூய்மை செய்து ஏரிகளை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அரூரை அடுத்த பாளையம் கிராமத்தில் காவல் துறையில் சேரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும், தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்த மையத்தின் நிறுவனர் தென்னரசு தலைமையில், கால்வாய் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். கீரைப்பட்டி புதூர் வேடியப்பன் கோயில் முதல் எல்லப்புடையாம்பட்டி வரை உள்ள சுமார் 4கி.மீ தூரமுள்ள கால்வாயில் முள்புதர்களை அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : canal cleaning work ,Arur , Aroor: The Vallimadurai Varattaru dam in the Aroor Keeraipatti panchayat was flooded due to the northeast and southwest monsoon rains.
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி