×

பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பை உயர்த்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது: திமுக எம்.பி.டி. ஆர். பாலு கேள்விக்கு மத்திய அரசு உறுதி மொழி

டெல்லி: பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பை உயர்த்துவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக பொருளாளரும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவருமான திரு. டி. ஆர். பாலு அவர்கள் நேற்று  (02 பிப்ரவரி 2021) மக்களவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டிற்கு எட்டு இலட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பை உயர்த்தி நிர்ணயம் செய்ய திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். மாண்புமிகு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் திரு. கிருசன் பால் குர்ஜர் அவர்களிடம் பிற்படுத்தபட்டோருக்கான வருமான வரம்பை உயர்த்துவது எப்போது நடைமுறைக்கு வரும்?

என்றும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2015ம் ஆண்டிலேயே வருமான வரம்பு 15 இலட்சமாக உயர்த்த பரிந்துரைத்ததா? என்றும், தனிநபர் வருமானம், மொத்த உற்பத்தி பெருக்கம், பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுகாதார செலவுகள் ஆகிய பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, பிற்பட்டுத்தப்பட்டோருக்கான வரம்பை 25 இலட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு:- “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கலந்தாலோசனைக்கு பின்னர், பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்பை  உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் திரு. டி . ஆர். பாலு அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.


Tags : government ,DMK MPD ,R , The government is considering raising the income limit for the backward classes: DMK MPD. R. The language of the federal government's commitment to the milk question
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!