×

சசிகலா வந்தாலும், வராவிட்டாலும் அதிமுக படுதோல்வி உறுதி ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

தஞ்சை: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தஞ்சையில் இன்றுகாலை அளித்த பேட்டி: டெல்லியில் கடந்த 2 மாதமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. விவசாயிகளின் ஒரு கோரிக்கையை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிடுகின்றனர். சுமூகமான தீர்வு காண முயற்சிக்கவில்லை. இது சர்வாதிகார நாடா, ஜனநாயக நாடா என்று தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்.

சசிகலா உடல் நிலை குணமாகி வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தனது காரில் அதிமுக கொடி கட்டி வந்தது அக்கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பெரிய மாற்றம் ஏற்படாது. வரும் சட்ட மன்றதேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திப்பது உறுதி.திமுக கூட்டணியில் எத்தனை சீட் கேட்பது என்று காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். ராகுல் காந்தி தமிழகம் வந்தது மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல் சீட்களின் எண்ணிக்கை அமையும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : AIADMK ,Sasikala ,interview ,EVKS.Ilangovan , ஈவிகேஎஸ்.இளங்கோவன்
× RELATED சொல்லிட்டாங்க…