×

கன்டெய்னர் லாரியில் கழுத்து இறுகி டிரைவர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தகுமார்(35) கன்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 29ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  தனியார் கார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் கன்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புழல் - தாம்பரம் புறவழிச்சாலையில் வந்து  கொண்டிருந்தார்.  அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியில் லாரியை நிறுத்தி லாரியின் பக்கவாட்டில் உள்ள கன்டெய்னரில் இரு அடுக்குகளை  இயக்கும் ரிமோட்டை சரி பார்த்தார். அப்போது, குனிந்து ரிமோட்டை தவறாக இயக்கியபோது  ஆனந்த்குமார் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். பொதுமக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : death , Avadi is the next private transport company in the cotton area.
× RELATED குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட...