×

இந்தியாவில் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 100 புதிய சைனிக் பள்ளிகள்; 750 ஏகலைவா பள்ளிகள்!: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறப்புப் பொருளாதாரச் சலுகை, வருமான வரி போன்றவையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கல்வியின் தரத்தை மேப்படுத்தும் வகையில் தனியாருடன் இணைந்து புதிதாக 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

100 புதிய சைனிக் பள்ளிகள்:

* நாடு முழுவதும் தன்னார்வ நிறுவ பங்கேற்புடன் மேலும்  100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும் எனவும், அதோடு உயர்கல்விக்காக இன்னும் பிற கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

* புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15,000 பள்ளிகளின் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.

* காஷ்மீர் மாநிலம் லே - வில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

750 ஏகலைவா பள்ளிகள்:

* நாடு முழுவதும் 750 ஏகலைவா மாடல் பள்ளிகள் தொடங்கப்படும்.

டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு:

* நாட்டிலேயே முதல்முறையாக  டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ரூபாய் 3,768 கோடி ஒதுக்கப்படும்.

* டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூபாய் 1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



Tags : schools ,Sainik ,Ekalaiva Schools ,India ,Nirmala Sitharaman Announcement , Quality of education, 100 new Sainik schools; 750 Ekalaiva Schools
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு