×

இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை கடைப்பிடிக்கபட உள்ளது. இதில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, வட்டார போக்குவரத்து அலுவலக சாலை ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் கட்டாயம், சீட் பெல்ட் அணியவேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது.

Tags : camp , Free medical camp
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு