×

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை உடைந்த விவகாரம்: 2 உதவி பொறியாளர்கள் சஸ்பெண்ட்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தென்பெண்ணையாற்றில் தடுப்பணை உடைந்த விவகாரத்தில் உதவி பொறியாளர் 2 பேர் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் தாளவனூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே 25.35 கோடியில் தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தநிலையில், கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து 2020 டிசம்பர் மாதம் 20ம் தேதி தடுப்பணை திறந்துவைக்கப்பட்டது.
இந்தநிலையில், தடுப்பணை திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆகிய நிலையில் கடந்த 23ம் தேதி தடுப்பணையின் கரைப்பகுதி திடீரென உடைந்தது. இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் திமுக போராட்டத்தில் ஈடுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அரசு செயலாளர் மணிவாசன் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்த விசாரணையில், தடுப்பணை கட்டுமானப்பணியில் கவனக்குறைவாக இருந்ததே காரணம் என ஊர்ஜிதம் ஆனது. இதைத்தொடர்ந்து, சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் கே.அசோகன், பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் என்.சுரேஷ், கீழ்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் எ.ஜவஹர், கீழ் பெண்ணையாறு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி.சுமதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.  ஆனால், இப்பணிகளை மேற்கொண்ட  ஒப்பந்த நிறுவனம் மீதும், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் இப்பணிக்கு தரச்சான்று வழங்கிய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த 26ம் தேதி செய்தி வெளியானது. இதை தொடர்ந்து,  தற்போது உதவி பொறியாளர்கள் ஜெகதீசன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று பொறியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.


Tags : Dam breach ,Assistant Engineers ,Government of Tamil Nadu , Dam breach in Tenpennayar: 2 Assistant Engineers Suspended: Government of Tamil Nadu action
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...