×

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் மகன், அமைச்சருக்கு ஒரு நியாயம் அதிமுக தொண்டனுக்கு ஒரு நியாயமா? : நீக்கப்பட்ட நிர்வாகி குமுறல்

சென்னைசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலையான சசிகலாவுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுப்ரமணிய ராஜா என்பவர் வரவேற்பு பேனர் வைத்ததாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினருமான புலியூர் இரா.அண்ணாதுரை சசிகலாவுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் பேனர் வைத்திருந்தார். இதையடுத்து அவரும் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து திருச்சியில் அண்ணாதுரை கூறியதாவது: ஜெயலலிதா இறந்த பின்னர் ஆட்சி கவிழும் என பலர் எண்ணிக்கொண்டிருந்தனர். சூழ்ச்சிகளும் நடந்தது. ஆனால் சசிகலா  தியாக உணர்வுடன் எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு ஜெ. சமாதியில் சபதம் செய்துவிட்டு சிறை சென்றார்.  அதன்பின்னர் அவரையே ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியைவிட்டு நீக்கிவிட்டனர். அதிமுக - அமுமுக என 2 ஆக உடைந்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 38 இடங்களிலும்

ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது நான்  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ெவன்றேன். ஆனால் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிவசக்தி என்பவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் ஆகிவிட்டார். அவருக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சமூக வலைத்தளத்தில் பூங்கொத்து படத்துடன் வாழ்த்து கொடுத்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பங்காளி சண்டை முடிந்து இணைந்துவிடுவோம் என்று கருத்து தெரிவித்தார். கோகுல இந்திரா சின்னம்மா என வரவேற்றுள்ளார். இப்படி பல்வேறு வகையில் ஆதரித்த மற்றவர்களை விட்டுவிட்டு எம்ஜிஆரின் உண்மை தொண்டர்களான என்னை போன்றோரை மட்டும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். தலைவர்களுக்கு ஒரு நியாயம், தொண்டர்களுக்கு ஒரு நியாயமா?  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : OBS ,minister ,Sasikala ,volunteer ,AIADMK , சசிகலா
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...