×

டெல்லி சிங்கு எல்லையில் கல்வீச்சு: விவசாயிகளை காலி செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டம்!!

டெல்லி : விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, தலைநகர் டெல்லிக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளையும் முற்றுகையிட்டு ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று, விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் டிராக்டர் பேரணி சென்றனர். அப்போது போலீசாருக்கும்-போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறி, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தி வரும் காசிப்பூர், திக்ரி மற்றும் சிங்கு பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் சிங்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேசியக் கொடியுடன் விவசாயிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய இவர்களில் சிலர், கடந்த 40 நாட்களாக இப்போராட்டத்தால் அன்றாட வாழ்க்கை பாதித்திருப்பதாகப் புகார் கூறினர்.வீட்டை விட்டும் வெளியில் வர முடியாமல் கைதிகளை போல் முடங்கி இருக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தில் ‘பாரத் மாதா கீ ஜெய்’, ’ஜெய் ஸ்ரீராம்’ என்றும் சிலர் கோஷம் எழுப்பப்பட்டன. மேலும் உள்ளூர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கல்வீச்சு நடந்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது..


Tags : protest ,border ,evacuation ,Delhi Singh , Delhi, Singh, Frontier, Education
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...