×

நடைபாதையில் குப்பைத்தொட்டி சுகாதார சீர்கேடு, விபத்து அபாயம்

ஊட்டி : ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ள நடைபாதை மீது குப்பைகள் கொட்டும் குப்பைத்தொட்டியை வைத்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஊட்டி நகராட்சி மார்க்கெட் முன்புறம் நடைபாதை உள்ளது. மார்க்கெட்டிற்கு வருபவர்கள் மட்டுமின்றி, க்மர்சியில் சாலையில் இருந்து லோயர் பஜார், ஏடிசி., மற்றும் மத்திய பஸ் நிலையம் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து ஊட்டி மார்க்கெட் மற்றும் கமர்சியல் சாலைக்கு வரும் பொதுமக்களும் இந்த நடைபாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இறைச்சி கடைகளுக்கு செலும் கேட்டின் முன்புறம் உள்ள  நடைபாதையில் தற்போது ஒரு குப்பை தொட்டி் வைக்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. மேலும், குப்பைத்தொட்டியில் இருந்து கழிவு நீர் நடைபாதைகளில் ஓடுகிறது. இதனால், இந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

நடைபாதையில் ஓடும் கழிவு நீரால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நடைபாதையில் உள்ள குப்பைத்தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : accident , Ooty: Ooty Municipal Market has a rubbish bin on the sidewalk.
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...