×

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் தைத்திருவிழா தேரோட்டம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பூதப்பாண்டி : பூதப்பாண்டி  பூதலிங்கசுவாமி- சிவகாமி அம்பாள் கோயில் தை திருவிழா கடந்த 19ம் தேதி  தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில்  சுவாமியும், அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி,  இரவில் கலை நிகழ்ச்சிகள், மெல்லிசை, பரத நாட்டியம், பக்தி மெல்லிசை  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

 9ம் விழாவான நேற்று காலை தேர்களில் ஸ்ரீவிநாயகரையும் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள்  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர்  கேட்சன், திமுக தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,  பூதலிங்கம் பிள்ளை,  ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், பேரூர் செயலாளர் ஆலிவர்தாஸ், பாஜ தோவாளை  ஒன்றிய ெபாது செயலாளர் விஜய் மணியன் மற்றும் அறங்காவலர் குழு  நிர்வாகிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு சப்தா வர்ணம் நிகழ்ச்சி  நடைபெற்றது.

 10ம் திருவிழாவான இன்று காலை சுவாமிக்கும்,  அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 10 மணிக்கு தெற்போற்சவம்  நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் சேதுராம், அறங்காவலர்  குழு தலைவர் சிவ.குற்றாலம் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags : Bhuthapandi BhutalingSwami Temple , Poothapandi: The Poothapandi Poothalingaswamy-Sivagami Ambal Temple Thai Festival started on the 19th. Every morning on festival days
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...