நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி: விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி 3 நாள் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் முன்பதிவு செய்யலாம். கடந்த 2011ம் ஆண்டு முதல்  தாமிரபரணி நீர்நிலைகளில் காணப்படும் பறவைக் குறித்த கணக்கெடுப்பு பணியை உள்ளூர் மக்களுடன் இணைந்து மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தாமிரபரணி நீர்நிலைகளில் பறவைகள் காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் கூந்தன்குளம், விஜயநாராயணம், வடக்கு கழுவூர், நயினார்குளம், ராஜவல்லிபுரம்,

மானூர் போன்ற குளங்களிலும் தென்காசி மாவட்டத்தில் வாகைகுளம், துப்பாக்குடி போன்ற குளங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பாகுளம், வெள்ளூர் கருங்குளம், ஆறுமுகமங்கலம், பெருங்குளம் மேல்புதுக்குடி சுனை போன்ற குளங்களிலும் பறவைகள் முகாமிடுகின்றன. சமீபகாலமாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல், ஆகாய தாமரை செடி பெருக்கம் போன்ற காரணங்களால் பறவைகள் ஆபத்துக்களை சந்திக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு  51 குளங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 74 வகையான பறவையினங்கள் 24 ஆயிரத்து 411 என்ற எண்ணிக்கையில் கண்டறியப்பட்டன.

இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணியை இந்த அமைப்புடன் நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இறக்கை சங்கம், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இணைந்து வருகிற  29ம் தேதி முதல் 31ம் தேதிவரை நடத்த உள்ளனர். இந்த கணக்கெடுப்பு  பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்  https://forms.gle/D2CyJiAuc8R7RcHTA என்ற கூகுள் இணைப்பு மூலம் தங்கள்  பெயரை பதிவு செய்யலாம். அல்லது twbe2020@gmail.com என்ற மின்னஞ்சல்  வழியாகவோ 99947664723 என்ற எண்ணிற்கோ அழைத்து பெயரை பதியலாம்.

பதிவு செய்ய  நாளை 26.1.2021 கடைசி நாள். பதிவு ெசய்தவர்களுக்கு வருகிற 21ம் தேதி  முன்னீர்பள்ளம் முத்தமிழ் பள்ளியில் மதியம் 2 மணிக்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து 30 மற்றும் 31ம் தேதிகளில் தன்னார்வலர்கள் பறவையியல் நிபுணர்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Related Stories:

>