வளசரவாக்கத்தில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் புதிய ஷோரூம் திறப்பு

சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் புதிய ஷோரூம் வளசரவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிமுக சலுகைகள் வழங்கப்படுகிறது. பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ஒரு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக பெறலாம், தங்க நகைகள் வாங்கும்போது ஒரு கிராமுக்கு ரூ.50 குறைவாகவும், வைர நகைகளுக்கு காரட்டுக்கு ரூ.5000 குறைவாகவும் செலுத்தலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட சலுகைகளும் உண்டு. வெள்ளி பொருட்களுக்கு செய்கூலியில் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகளுக்கு MRPயில் 10% குறைவு போன்ற சலுகைகளும் உள்ளன. இந்த சலுகைகள் வளசரவாக்கம் ஷோரூமில் மட்டுமே கிடைக்கும்.

இதுகுறித்து ஜிஆர்டி மேலாண்மை இயக்குநர் G.R.‘அனந்த்’ அனந்தபத்மநாபன் கூறுகையில், ‘‘வளசரவாக்கத்தில் எங்களது ஷோரூமை திறந்துள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருங்கி வந்துள்ளோம். பல்வேறு டிசைன்களில் பிரமிப்பூட்டும் விதத்தில் கலெக்ஷன்கள் குவிந்துள்ள இந்த புதிய ஷோரூமில் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை மேலும் சந்தோஷமாக மாற்றவே பல்வேறு அறிமுகச் சலுகைகளையும் வழங்கியுள்ளோம்,’’ என்றார். ஜிஆர்டி நிர்வாக இயக்குனர் G.R.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்த பண்டிகை காலத்தில் எங்களது சிறப்பு அறிமுக சலுகைகள் சிறப்பு பரிசுகளுடன் இணைந்து இந்த புதிய ஷோரூம் வெற்றிகளை பெறும் என்று உறுதியாக நம்புகிறோம். வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமிற்கு வந்து பிரம்மாண்ட கலெக்ஷன்களை பார்வையிட வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>