×

தீயணைப்பு துறை சார்பில் தீ செயலி விழிப்புணர்வு

பொன்னேரி: தீ விபத்து, வெள்ளம், வனவிலங்குகள் மீட்பு, விஷவாயு கசிவு மற்றும் ஆழ்துளை கிணறு விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மீட்பு படையுடன் வந்து உதவுகிறார்கள். அவர்கள் பணியை மேலும் முடுக்கிவிடும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தீயணைப்பு துறை அதிகாரி மீனாட்சி விஜயகுமார் நேற்று பொன்னேரி தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் எல்லைக்கு உட்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பொன்னேரி நகரின் முக்கிய அலுவலகங்களில் தீ செயலியை அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Fire Department , Fire Processor Awareness on behalf of the Fire Department
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு