டெல்லி மட்டுமே ஏன்? 4 தலைநகரம் வேண்டும்: மம்தா பேச்சு

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் 7 கிமீ பேரணி நடத்தியது. இதில்,  முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: நேதாஜியின் 125வது பிறந்த நாளை மிக விமரிசையாக கொண்டாட வேண்டும். அவரது பிறந்த நாள் பராக்கிரம தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கும் முன், அது குறித்து மோடி அரசு என்னுடன் ஆலோசிக்கவில்லை. யார் இந்த பெயரை தேர்வு செய்தது? அரசியல் ரீதியாக அவர்களுக்கு என்னை பிடிக்காமல் போகலாம்.  இந்த நாளை ஏன் தேச தலைவர்கள் தினமாக கடைபிடிக்கக் கூடாது. நேதாஜியின் பிறந்த நாளை அரசு தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்.நேதாஜியின் உறவினரிடமாவது எந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து இருக்கலாம்.

ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் கொல்கத்தா தான் நாட்டின் தலைநகராக இருந்தது. நமது நாட்டிற்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும். டெல்லியை மட்டும் ஏன் தலைநகரமாக வைத்திருக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தை நாட்டின் பல இடங்களில் நடத்த வேண்டும். தேசிய கீதத்தை மாற்றும் திட்டம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>