முதல்வர் எடப்பாடி நாளை கோவையில் பிரசாரம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நாளை (23ம் தேதி) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்கிறார். காலை 7.05 மணிக்கு கோணியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து அவினாசி ரோடு மேம்பாலம், என்.பி. ரோடு, பெத்தேகவுண்டர் சாலை, ராஜ வீதி, செல்வபுரம், குனியமுத்தூர், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, ஆனைமலை ரவுண்டானா, என்எம் சுங்கம் சந்திப்பு, கல்தான்பேட்டை, சூலூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். சங்கமம் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பெரியோர்களுடன் கலந்துரையாடுகிறார். முருகன் மஹாலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பிற சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>