×

சீனாவை நினைவுப்படுத்துவதால் வெறுப்பு டிராகன் பழத்தின் பெயரை கமலம் என மாற்றியது குஜராத்: முதல்வர் ரூபானி அதிரடி

காந்திநகர்:  குஜராத்தில் டிராகன் பழத்துக்கு “கமலம்” என பெயர் மாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கட்ச், நவ்சாரி, சவுராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் டிராகன் பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றது. பொதுவாக வெப்பமண்டல பகுதிகளில் இந்த பழம் பயிரிடப்படும். இது கற்றாழை இனத்தின் ஒரு வகையாகும். இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் உணவாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றது.

இந்நிலையில், டிராகன் பழத்தின் பெயரை மாற்றுவதற்கு குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில்,‘‘டிராகன் என்ற பெயர் பொருத்தமானதாக இல்லை. இந்த பெயர் சீனாவை நினைவுகூறுவது போன்று இருக்கின்றது. எனவே, இந்த பெயரை மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.  டிராகன் பழம் பார்ப்பதற்கு தாமரை போன்று இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கு “கமலம்” என பெயரிட்டுள்ளோம். இதில், அரசியல் பின்னணி எதுவும் கிடையாது.

இது விலையுயர்ந்த பழமாகும். இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றது,” என்றார். கமலம் என்றால் தாமரைசமஸ்கிருதத்தில் ‘கமலம்’ என்றால் தாமரை என்பது அர்த்தமாகும். பாஜ.வின் தேர்தல் சின்னமும் தாமரையாகும். குஜராத்தில் பாஜ அலுவலகத்திற்கும் ஸ்ரீகமலம் என பெயரிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும், பாஜ.வின் மாநில தலைமை அலுவலகங்களுக்கு பெரும்பாலும் கமலம் என்ற பெயரை ஒத்தே பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.


Tags : China , Hate for remembering China The name of the dragon fruit Changed to Kamal Gujarat: Chief Minister Roupani Action
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...