டெய்லர் வீட்டில் 15 சவரன் கொள்ளை

பட்டாபிராம்:  பட்டாபிராம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (57). டெய்லர். இவரது மனைவி சரளா (50).  கூலித்தொழிலாளி. இவர்களுடன் விநாயகத்தின் தாய் எல்லம்மாள் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை விநாயகம் டெயலர் கடைக்கு சென்றுவிட்டார்.  சரளாவும் வேலைக்கு சென்றுவிட்டார்.  எல்லையம்மாள்  மதியம்  வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று உள்ளார். வீட்டு சாவியை அங்கே ஒரு இடத்தில் மறைத்து வைத்து சென்றுள்ளார். பின்னர், எல்லையம்மாள் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்து 15 சவரன் கொள்ளை போனது தெரியவந்தது.

Related Stories:

More