×

புதுகை அருகே கடலில் மாயமான 4 மீனவர்களை தேடும் பணி தீவிரம்: 5 விசைப்படகுகளில் புறப்பட்டனர்

அறந்தாங்கி: புதுகை அருகே மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்களை தேடி 5 விசைப்படகுகளில் 20 மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடந்த 18ம்தேதி காலை 214 விசைப்படகுகளில் 900 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் மெசியா(30), நாகராஜ்(52), செந்தில்குமார்(32), மண்டபத்தை சேர்ந்த சாம் (28) ஆகிய 4 மீனவர்கள் ஒரு விசைப்படகில் சென்றனர். கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்ற 214 படகுகளில், 213 படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பினர். ஆனால் ஆரோக்கியசேசுவுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற 4 பேரும் கரை திரும்பவில்லை. இதுகுறித்து சகமீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கியசேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில், படகு கடலுக்குள் மூழ்கியழ, உடனே மீனவர்கள் மீன்வளத்துறையின் அனுமதியோடு 3 விசைப்படகுகளில் 12 மீனவர்கள், கடலில் தேடி சென்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் கரை திரும்பினர்.

இதையடுத்து நேற்று காலை 20 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் புறப்பட்டனர். இதனிடையே, இலங்கை கடற்படை நேற்றுமுன்தினம், தங்களது வலைதள பக்கத்தில் ரோந்து சென்றபோது தங்களது படகில் மோதி தமிழக மீனவர்கள் படகு மூழ்கியதாக தகவல் பதிவிட்டிருந்தது. இதை பார்த்து தமிழக மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர். மீனவர்கள் போராட்டம்: இந்தநிலையில், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்புகளை கண்டித்தும், தமிழக படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி படகு கடலில் மூழ்கி கவிழ்த்ததை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒன்பதாவது நாளாக நேற்றும் தொடர்ந்தனர். கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 400 பெரிய விசைப்படகுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.



Tags : fishermen ,sea ,Pudukai , Intensity of the task of searching for the magical 4 fishermen in the sea near Pudukai: 5 set off in key boats
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...