பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!

இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் சுதந்திரப் பேரணி நடைபெற்றுள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தின், சிந்து மாகாணத்தை பிரிட்டீஷ் காரர்கள் கைப்பற்றியிருந்தனர். தொடர்ந்து, 1947-ம் ஆண்டு பாகிஸ்தானின் தீய இஸ்லாமியவாதிகளிடம் சிந்து மாகாணத்தை பிரிட்டீஷ் காரர்கள் ஒப்படைத்தனர்.

இருப்பினும், கடந்த 1967-ம் ஆண்டு முதல் முறையாக தனி சிந்துதேசம் கோரி பாகிஸ்தானில் சிந்துமாகாணத் தலைவர் ஜிஎம் சையது, பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் போராட்டம் தொடங்கியது. இதற்கிடையே, நேற்று ஜிஎம் சையதுவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அடங்கிய படம் கொண்ட பதாகைகளுடன் தலையீடு கோரி கோஷங்களை எழுப்பி பேரணி நடத்தினர்.

இந்த சுதந்திர பேரணி தொடர்பாக சிந்துதேஷ் இயக்கத்தின் தலைவர் ஷஃபி முகமது பர்ஃபாத் கூறுகையில், சிந்து என்பதுதான் இந்தியாவுக்கு அதன் பெயரையே அளித்தது. சிந்து சமவெளி மக்கள் தொழில், தத்துவம், கடல்வழி பயணம், கணிதம், வானியல் என்று சிறந்து விளங்கிய நாகரீகமாகும். ஆனால் தற்போதுஇஸ்லாமோ-பாசிச-பயங்கரவாதத்தினால் கட்டிப் போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இதனை ஆட்சி செய்து வருகிறது, இஸ்லாமியத்தின் பெயரில்

பஞ்சாபிய ஏகாதிபத்தியம் தான் நடைபெற்று வருகிறது.

இன்று பஞ்சாபி காலனியாதிக்கத்தில் சிக்கியிருக்கிறோம். ராணுவத்தின் பலப்பிரயோகத்தின் கீழ் வாழ்ந்து வருகிறோம். சிந்து மக்கள் அடக்குமுறைக்கு அடிபணிந்து பாகிஸ்தானின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. எனவே எங்கள் சுதந்திர வேட்கையை ஆதரிக்குமாறு உலக நாடுகளைக் கேட்டு வருகிறோம். பாசிச-இஸ்லாமிய- பயங்கரவாத பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோருகிறோம் என்றார்.

Related Stories: