×

அரசை எதிர்பார்த்து காத்திராமல் அன்னமங்கலம் வரத்து வாய்க்காலை தூர்வாரி இளைஞர்கள் அசத்தல்: பொதுமக்கள் பாராட்டு

பெரம்பலூர்: அரசை எதிர்நோக்கிக் காத்திருக்காமல் அன்னமங்கலம் வரத்து வாய்க்காலைத் தூர்வாரி இளைஞர்கள் அசத்தினர்.இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அவ்வூரைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட வேளாண் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் நிவர் புயல், புரெவி புயல் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையோடு, வழக்கமான வடகிழக்குப் பருவ மழையும் சேர்ந்து கொட்டித் தீர்த்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில், பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73ஏரிகளில் 32ஏரிகள் வரை நிரம்பியுள் ளன.

குறிப்பாக அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான விசுவக்குடி அருகே உள்ள அணைக் கட்டிலிருந்து கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து தண்ணீர்வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெங்கலம் ஏரி 80சதவீதம் நிரம்பி விட் டது.இருந்தும் அன்னமங்கலம் ஏரிக்கு மட்டும் போதுமான நீர்வரத்து இல்லாத தால் தொடர்ந்து வறண்டு காணப்பட்டு வந்தது. இதற்கு முக்கியக் காரணம் விசுவக்குடி அணைக்கட்டு பகுதியிலிருந்து திறக்கப் பட்ட தண்ணீர் அன்ன மங்கலம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப் படாமல் முட்கள், புதர்கள் மண்டி அடர்ந்து காணப்பட்டது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அன்னமங்கலம் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு ஏரிக்கான வரத்து வாய்க்கால்களை தூர்வார முடிவு செய்தனர்.

இதன்படி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெரியவர்கள் ஆலோசனையுடன் மண்வெட்டி, கத்தி போன்றவற்றை எடுத்துச்சென்று வரத்து வாய்க்காலில் மண்டிக்கிடந்த புதர்களை, செடி களை அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அன்னமங்கலம் ஏரிக்கு வரும் நீர் வரத்து தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப்களில் மட்டுமே இளைஞர்கள் ஆர்வம் காட் டுவார்கள் என்றிருந்த நிலை மாறி, வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிக ளிலும் ஆர்வம்காட்டி வே ளாண் பயிர் சாகுபடிக்கு உதவிக்கரம் நீட்டியது, உள்ளூர் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

Tags : Annamangalam ,government , Annamangalam: Government praises youth for not waiting for government
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...