×

திருச்சுழி தாலுகாவில் தொடர்மழை 5000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

திருச்சுழி: திருச்சுழி தாலுகாவில் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் நெல், கடல, மக்காச்சோளம் பயிர்களை விளைவித்திருந்தனர். இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையி–்ல், ‘நரிக்குடி பகுதியில் பல வருடங்களுக்கு பின்பு கண்மாய் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீராக செல்வது மகிழ்ச்சி அளித்தாலும் நீர் வழித்தடங்கள் பராமரிக்கப்படாததால் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து விட்டது.

 இதனால் அறுவடைக்கு தயரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி மீண்டும் முளைக்க ஆரம்பித்துவிட்டன. வங்கியில் கடன் வாங்கி பல மாதங்களாக விவசாய பணிகள் மேற்கொண்ட நிலையில், இறுதி கட்டத்தில் முற்றிலும் பலனில்லாமல் போனது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

அழுகும் தக்காளி
தொடர்மழையால் விருதுநகர் அழகாபுரி சாலை சின்னப்பரெட்டியபட்டி கிராம பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் அழுகி வருகின்றன. இதுகுறித்து விவசாயி பாண்டி கூறுகையில், ‘4 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் படைப்புழுவால் சேதமடைந்து விட்டது. ஒரு ஏக்கரில் நடவு செய்யப்பட்ட தக்காளி காய்ப்பிடிக்கும் தருவாயில் இருந்தது. தற்போது அதுவும் தொடர் மழையால் அழுகி வருகின்றன. நடவு, மருந்து தெளிப்பு, களை எடுத்தல் என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவழித்துள்ளோம். உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.



Tags : taluka ,Tiruchirappalli , Cyclone, torrential rains, crops, destruction
× RELATED தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்