×

கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு..!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் வருகின்ற 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து, அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: புனேயில் இருந்து, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500, கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள், தமிழகம் வந்துள்ளன. மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கப்பட்டு, வரும், 16ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்நிலையில், நாடு முழுதும் உள்ள, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டமாக, 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் முன்னிலை பணியாளர்களுக்கு ஜனவரி 25ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும்.

கொரோனா தடுப்பூசியை விஞ்ஞானிகளின் அறிவுரைப்படி இடதுகையில் .5mm போடப்படும். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையிலும் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது. எந்த ஒரு அச்சமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்டதும் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணிவிடக் கூடாது.தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Radhakrishnan ,Villupuram , Corona, Vaccine, Preparations, Health Secretary, Radhakrishnan, Review
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்