×

அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பஸ்கள் இயக்கம் எம்டிசி நிர்வாகம் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வரின் உத்தரவின் பேரில், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக 200 பேருந்துகள் நேற்று முதல் (10.5.2021) முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதனை தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும்.   …

The post அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பஸ்கள் இயக்கம் எம்டிசி நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : MDC administration ,Chennai ,Transport Corporation ,Tamil Nadu ,Coronavirus Prevention and Precautionary Measures ,
× RELATED சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால்...