நாட்டின் பாதுகாப்புக்கு பாக்.-சீனா அச்சுறுத்தல்: தலைமை தளபதி நரவானே பேச்சுநாட்டின் பாதுகாப்புக்கு பாக்.-சீனா அச்சுறுத்தல்: தலைமை தளபதி நரவானே பேச்சு

புதுடெல்லி: ‘பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன,’ என ராணுவ தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். ராணுவ தினம் நாளை மறுதினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று அளித்த பேட்டியில்  கூறியதாவது: பிராந்தியத்தில் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த போர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். கிழக்கு லடாக்கில் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. இரு நாடுகளும் இணைந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. அவற்றுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இவற்றின் இருமுனை தாக்குதலை எதிர்கொள்ள, நமது ராணுவம் தயாராக இருக்க வேண்டும். பாகிஸ்தான் தொடர்ந்து, தீவிரவாதத்தை அரசின் கொள்கையாக பயன்படுத்தி வருகிறது. அதன் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்துக்கு தகுந்த நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: