×

எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்: விராலிமலையில் சன் டி.வி. மைக்கை தூக்கி வீசி எறிந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சன் டி.வி. மைக்கை தூக்கி வீசி எறிந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் சீர் பற்றிய சன் டி.வி. செய்தியால் ஆத்திரமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சன் டி.வி. மைக்கை தூக்கி வீசி எறிந்துள்ளார். விராலிமலையில் அனைத்து செய்தியாளர்களுக்கும் அழைப்பு விடுத்துவிட்டு சன் டி.வி. மைக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் தூக்கி  எறிந்ததால் நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விஜயபாஸ்கர் வீட்டு சீர் என கூறி தொகுதியில் வீடு வீடாக பொங்கல் பரிசு வழங்கியது பற்றி சன் டி.வி. வெளியிட்டது. செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து சன் டி.வி. நிருபரை வெளியேற சொன்னதற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது: புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரையும் அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. ஊடகங்களை மிரட்டுவதும் - அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான். மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்! அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : election ,C. Vijayabaskar ,Viralimalai ,Sun TV ,MK Stalin , Minister Vijayabaskar, DMK, MK Stalin, condemnation
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...