சிவில் சப்ளை டிஜிபியாக சுனில்குமார் நியமனம்

சென்னை: சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக சுனில் குமாரை நியமித்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மாநில மனித உரிமை ஆணையம் டிஜிபியாக இருந்த சுனில் குமார், சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த சைலேந்திர பாபு, அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>