×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கும் ஆம்னி பேருந்து

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11, 12 மற்றும் 13 தேதிகளில் சென்னையில் இருந்து இயக்கும் ஆம்னி பேருந்துகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 11.01.2021 - 250 பேருந்துகள், 12.01.2021 - 410 பேருந்துகள், 13.01.2021 - 460 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சென்னையில் அம்பத்தூர், ரெட்டில்ஸ், தண்டையார்பேட்டை, எக்மோர் மற்றும் கோயம்பேடில் இருந்து இயக்கப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Tags : Omni ,eve ,Chennai ,Pongal , Omni bus from Chennai on the eve of Pongal
× RELATED உத்தமபாளையத்தில் பஸ் மோதி தூய்மை பணியாளர் பலி