×

இந்தியாவில் கடந்த 7 மாதத்தில் கொரோனா கழிவுகள் 33,000 டன் அகற்றம்: தமிழகம் 4ம் இடம்

புதுடெல்லி: கொரோனா காரணமாக நிறைய பரிசோதனைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பிபிஇ கிட், மாஸ்க்குகள், ஷூ கவர்கள், கையுறைகள், மனித திசுக்கள், கெட்டுப்போன ரத்தம், உடல் திரவங்களை அகற்றும் பிளாஸ்டகள், பஞ்சுகள், சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட காட்டன் ஸ்வாப்புகள், ஊசிகள், சிரிஞ்சுகள் என பல்வேறு பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் கழிவுகள் உருவாகி இருக்கிறது. மார்ச் 2020 முதல் ஜுன் 2020 வரையிலான காலக் கட்டங்களில் அனைத்து மாநில அரசுகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : India ,Tamil Nadu , 33,000 tonnes of corona waste disposal in India in last 7 months: Tamil Nadu ranks 4th
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...